ஃபாத்திமா தற்கொலை வழக்கு: கேரளா விரையும் தனிப்படை..!



சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளா மாணவியின் தற்கொலை குறித்து விசாரிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு செல்கின்றனர்.

சென்னை ஐஐடியில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்த ஃபாத்திமா லத்தீப் தனது விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு மாநிலங்களை உலுக்கியுள்ளது. மாணவியின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆதாரங்களை கொண்டு ஐஐடி பேராசியர்கள் ஹேமச்சந்திரன், சுதர்சன் பத்பநாபன், மிலிந்த் மூன்று பேரிடம் சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.



அதன் பிறகு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த விசாரணையானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான குழு பேராசியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

ஐஐடி மாணவி மரணம்: உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத பாலினப் பாகுபாடுகள் - கவிஞர் பெருந்தேவி எழுப்பும் கேள்விகள்!

மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, தோழிகள், உறவினர்கள் என அனைவரும் விசாரணையின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.


பாத்திமா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார் என்பதான ஆதாரங்கள் போலீசாரிடம் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை எவ்வித உண்மைகளும் விசாரணையின் மூலம் வெளிப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் விடுமுறைக்காக கேரளாவுக்கு சென்றிருக்கும் பாத்திமாவின் தோழிகளிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் கொல்லத்திற்கு செல்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாத்திமா லத்தீஃப்: மூன்று பேராசிரியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

இரு தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசாருக்கு செல்போனில் பதிவாகியுள்ள ஆதராம்தான் மையமாக திகழ்கிறது. அதை ஆய்வு செய்து வரும் சைபர் குற்ற பிரிவின் முடிவுக்கு பின்னர்தான் பாத்திமாவின் வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments